உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காரியாபட்டியில் தலையாரி பணிக்கான நேர்முகத்தேர்வு

காரியாபட்டியில் தலையாரி பணிக்கான நேர்முகத்தேர்வு

காரியாபட்டி: காரியாபட்டி தாலுகாவில் காலியாக உள்ள 5 தலையாரி பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடந்தது. 10ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை 400க்கு மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். காரியாபட்டி தாலுகாவில் 5 தலையாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்ப சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 500க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தனர். சில தினங்களுக்கு முன் எழுத்து தேர்வு நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்ற 400க்கும் மேற்பட்டவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டனர். அக். 31, நவ.1ல் தாலுகா அலுவலகத்தில் 2 கட்டங்களாக நேர்முகத் தேர்வு நடந்தது. விருதுநகர் நில அளவை உதவி இயக்குனர் விஜயகுமார், தாசில்தார் மாரீஸ்வரன் தேர்வு நடத்தினர். இதில் 10ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ