உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பிரதமர் சூரிய ஒளி மின்சார திட்டத்தில் பயன்பெற அழைப்பு

பிரதமர் சூரிய ஒளி மின்சார திட்டத்தில் பயன்பெற அழைப்பு

விருதுநகர் : அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஜவஹர் ராஜ் செய்திக்குறிப்பு: இந்தியாவில் ஒரு கோடி வீடுகளுக்கு 300 யூனிட் இலவச சூரிய ஒளி மின்சாரம் வழங்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரதம மந்திரியின் இலவச சூரிய ஒளி மின்சாரம் திட்டத்தின் மூலம் வீட்டின் கான்கிரீட் கூரை மீது சோலார் பேனல் நிறுவ 40 சதவீத மானியம் வழங்கப்படும். ரூ. 30 ஆயிரம் முதல் 78 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் மூலம் மின் கட்டணத்தை சேமிக்க முடியும். காலியான கூரையை பயன்படுத்தி கொள்ளலாம். கூடுதல் இடம் தேவையில்லை.பயன்பெற நுகர்வோர் தங்கள் அலைபேசி எண், மின்னஞ்சல், முகவரி, மின் இணைப்பு எண், வீட்டின் கான்கிரீட் கூரையின் புகைப்படம் ஆகியவற்றை பிரதம மந்திரியின் சூரிய வீடு எனற செயலியில் மார்ச் 8க்கு முன் பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும்.இதற்கு வசதியாக அஞ்சல் துறை மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.தங்கள் பகுதிக்கு வரும் அஞ்சல்காரரையோ அருகில் உள்ள ஏதேனும் அஞ்சல் அலுவலகத்தையோ அணுகி இத்திட்டத்தில் பயன்பெறலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி