ஜீவன் ரக்ஷா பதக்கம் விருது பெற அழைப்பு
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ், இயற்கை சீற்றங்கள், விபத்துகள், பயங்கரவாதிகள் தாக்குதல், நீரில் மூழ்குதல், மின்கசிவு, நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதல் மற்றும் சுரங்கங்களில் மீட்புப் பணிகள் போன்ற சம்பவங்களில் ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதில் மனதாபிமான குணத்துடன், ஒருவரின் உயிரைக் காப்பாற்றியதற்காக விருது வழங்கப்படுகிறது.இவ்விருது சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம், உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம், ஜீவன் ரக்ஷா பதக்கம் என மூன்று பிரிவுகளாக வழங்கப்படுகிறது.2025-ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக்ஷா பதக்கம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். 2023 அக். 1க்கு முன்னர் இச்செயல்களை புரிந்தவர்களுக்கு பொருந்தாது. www.virudhunagar.nic.inலிருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக முகவரிக்கு ஆக. 22 மாலை 5.30 மணிக்குள் அனுப்ப வேண்டும், என்றார்.