உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வரத்து கால்வாய், கம்மிக்குளம் கண்மாய் துார்வாராததால் பாசனத்திற்கு சிக்கல்

வரத்து கால்வாய், கம்மிக்குளம் கண்மாய் துார்வாராததால் பாசனத்திற்கு சிக்கல்

தளவாய்புரம்: தளவாய்புரம் அருகே வரத்து கால்வாய் , கம்மிக்குளம் கண்மாய் துார் வாராததால் நீர்வரத்துக்கான மதகுகள் சிதிலமடைந்து தண்ணீர் தேக்கி விவசாயத்திற்கு பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் மேலுார் துரைச்சாமிபுரம் கிராமத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தேவியாறு பாசன பகுதி மூலம் நீர் வரத்து பெரும் கம்மிகுளம் கண்மாய் வரத்து கால்வாய் துார் வாராமல் உடைப்பெடுத்து பாதிப்பதால் 100 ஏக்கருக்கும் அதிகமான கம்மிக்குளம் பாசன பகு திகள் முறையாக தண்ணீர் தேக்க முடியாமல் சிக்கலுக்கு உள்ளாகி வருகின்றனர். இப்பகுதி கால்புறவு கண்மாயிலிருந்து புத்துார் கிராமத்திற்கு நீர்ப்பாசனம் பெறும் கம்மிகுளம் கண்மாய், புத்துார் தளவாய்புரம் செல்லும் ரோட்டில் அமைந்துள்ளது. 2019--20ல் கண்மாய் மராமத்து பணிகள் நடந்துள்ள நிலையில் தற்போது வரத்து கால்வாய் புதர்கள் படர்ந்தும் உடைப்பெடுத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேவி ஆற்றில் மழைக்காலங்களில் நீர்வரத்து இருந்தும் கண்மாய்க்கு நீர் உட்பு காமல் ஆற்றிலேயே கலந்து செல்கிறது. செல்வகணேசன், விவசாயி: 5 ஆண்டுகளாக கண்மாயில் எந்த மராமத்து பணிகளும் நடைபெறவில்லை. தற்போது கால்புறவு கண்மாயிலிருந்து கம்மிகுளம் கண்மாய் வரத்து கால்வாய் உடைப்பெடுத்து காணப்படுவதால் தண்ணீர் கண்மாய்க்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு அளித்தும் பயனில்லை. மழைக்காலத்திற்கு முன் நீர் வரத்து கால்வாய், மடை, மதகு சரி செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !