மேலும் செய்திகள்
அதிவேகத்தில் தனியார் பஸ்கள் நடவடிக்கை அவசியம்
22-Sep-2025
ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் போக்குவரத்து சிரமங்களை குறைக்க கோயில்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள், மார்க்கெட்டுகள், புதிய பஸ் ஸ்டாண்டுகள் உட்பட நகரின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் சர்குலர் பஸ்கள் இயக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகாவிலும் மக்கள் தொகை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாய விளைநிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக உருமாற்றமாகி குடியிருப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புதிய குடியிருப்பு பகுதிகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலும், குறைந்த பட்ச போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலைதான் காணப்படுகிறது. இதில் டூவீலர்கள் வைத்திருப்பவர்கள் நகர் பகுதிக்கு எளிதாக வந்து சென்று விடுகின்றனர். ஆனால், டூவீலர்கள் இல்லாதவர்கள் பஸ்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் போதிய பஸ்கள் இல்லாமல் ஆட்டோக்களில் அதிக கட்டணம் கொடுத்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய நகரங்களில் புதிய பஸ் ஸ்டாண்டுகள் இருப்பதால் அங்கு மக்கள் வந்து செல்ல கூடுதல் போக்குவரத்து செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனை தவிர்க்க மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் பழைய புதிய பஸ் ஸ்டாண்டுகள், அரசு, தனியார் மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள், வங்கிகள், கோவில்கள், மார்க்கெட்டுகள் என அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் சர்குலர் பஸ்கள் இயக்கப்பட வேண்டும். இதனால் நகரின் எந்த பகுதியில் இருந்தாலும் மக்கள் சிரமமின்றி வந்து செல்ல முடியும். இதனால் டூவீலர்கள் பயன்பாடு குறைந்து பொது போக்குவரத்து அதிகரிக்கும். அரசு போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் கூடும்.
22-Sep-2025