உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறுவது நியாயமில்லை: கிருஷ்ணசாமி

வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறுவது நியாயமில்லை: கிருஷ்ணசாமி

ராஜபாளையம்: ''இன்றைய நிலையிலும் குடிநீர் விலைக்கு வாங்கி குடிக்கும் அவல நிலை உள்ள போது மாநில அரசு தாங்கள் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டதாக கூறுவது நியாயம் இல்லை'', என ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், மத்திய அரசின் வீடு தோறும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் திட்டம் செயல்படுத்தாமல் வெறும் குழாய் இணைப்பு மட்டும் இருக்கிறது. மத்திய அரசின் திட்டம் தமிழகத்தில் ஏன் நிறைவேற்றப்படவில்லை. இந்த அரசு எண்ணிக்கைக்காக செய்வதை விட்டுவிட்டு யாருக்கெல்லாம் இலவச பட்டா இல்லையோ அவர்களுக்கு உரிய வகையில் ஆட்சேபனை இல்லாத நிலங்களை வழங்க வேண்டும். சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் இருக்கன்குடி ஊராட்சி எல்லையில் இருந்தது. 1995ல் சில அதிகாரிகள் திட்டமிட்டு தவறுதலாக 5 கி.மீ., தொலைவில் உள்ள கிராமத்தில் சேர்க்கப்பட்டதால் இருக்கன்குடி ஊராட்சியால் எந்த நல்ல செயல்பாடும் செய்ய முடியவில்லை. 130 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்படுவது முறையாக தரமாக நடைபெறவில்லை. தொன்று தொட்டு ஒரே சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் பரம்பரை அறங்காவலராக இருந்து வருகின்றனர். அனைத்து சமுதாயத்தினரும் அறங்காவலர்களாக நியமிக்கப்பட வேண்டும். இதை வலியுறுத்தி செப்.24ல் கலெக்டர் அலுவலகம் முன்பு எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி