உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / செம்பொன்நெருஞ்சில் ஜல்லிக்கட்டு

செம்பொன்நெருஞ்சில் ஜல்லிக்கட்டு

நரிக்குடி: நரிக்குடி செம்பொன்நெருஞ்சியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 14 மாடுபிடி வீரர்கள், 3 மாட்டு உரிமையாளர்கள், பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ., டூவீலரில் சென்ற இரு பெண்கள் என 19 பேர் காயமடைந்தனர். நரிக்குடி செம்பொன்நெருஞ்சியில் அய்யனார், கருப்பணசாமி, அரியநாச்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. காலை 9:45 மணிக்கு துவக்கி வைக்கப்பட்டது.அருப்புக்கோட்டை ஆர். டி.ஓ., கனகராஜ் (பொறுப்பு) கொடி அசைத்து துவக்கி வைத்தார். 500க்கும் மேற்பட்ட காளைகள், 150 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். ஆக்ரோஷத்துடன் சீரிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக அடக்கினர். மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் கட்டில், சில்வர் குடம், ஏர்கூலர், டேபிள் பேன், எலக்ட்ரிக் அடுப்புகள், சீலிங் பேன் பரிசுகளாக வழங்கப்பட்டது. எஸ்.பி., கண்ணன், திருச்சுழி டி.எஸ்.பி., பொன்னரசு நேரில் பார்வையிட்டனர். 250 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டுஇருந்தனர். இதில் மாடுபிடி வீரர்கள்14 பேருக்கும், பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ., சுப்பிரமணியனுக்கும், மாட்டு உரிமையாளர்கள் 3 பேருக்கும் மாடுகள் முட்டியதில் காயமடைந்தனர். மாடுகள் மிரண்டு ஓடியதில் எதிரில் டூவீலரில் வந்தவர்கள் அச்சத்தில் கீழே விழுந்ததில் இரு பெண்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ