மேலும் செய்திகள்
மாநில அளவிலான கபடி போட்டிக்கு வீரர்கள் தேர்வு
28-Sep-2026
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூரில் டவுன் ரோட்டரி சங்கம், விருதுநகர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில் 20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கபடி பயிற்சி வகுப்பு நிறைவு விழா , மாநில போட்டிக்கு தகுதி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பெருமாள்பட்டி நாடார் உறவின்முறை நிர்வாகிகள் தலைமை வகித்தனர். அமெச்சூர் கபடி கழக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ரோட்டரி முன்னாள் துணை கவர்னர் முத்துராமலிங்க குமார் வரவேற்றார். ரோட்டரி மாவட்ட கவர்னர் மயில் பாலசுப்பிரமணியம், தலைவர் சிவகுமார், கபடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினர். விழாவில் ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பயிற்சியாளர்கள் பங்கேற்றனர். செயலாளர் சரவணகுமார் நன்றி கூறினார்.
28-Sep-2026