மேலும் செய்திகள்
நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி
03-Nov-2025
காரியாபட்டி: காரியாபட்டி, பி.புதுப்பட்டியை சேர்ந்த, 5 வயது சிறுவன் ஆப்ரிக்க கண்டத்தின் தான்சானியாவில் உள்ள மிக உயரமான கிளிமாஞ்சரோ சிகரம் ஏறி சாதனை படைத்ததுடன், 3வது சாதனையாளர் என்ற இடத்தை பிடித்தார். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பி.புதுப்பட்டியை சேர்ந்த சிவவிஷ்ணு, 5, காங்கேயம் பாரி, 7, அமர்நாத், 40, இன்பா, 10, கோவை மனுசக்கரவர்த்தி, 12, சென்னை மகேஷ்வரி, 25, கடலுார் சக்திவேல், 32. எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் முத்தமிழ் செல்வி தலைமையில், இவர்கள், ஆப்ரிக்க கண்டத்தின் தான்சானியாவில் உள்ள மிக உயரமான கிளிமாஞ்சரோ சிகரத்தில் அக்., 30ல் ஏற துவங்கி நவ., 5ல், 5,895 மீட்டர் ஏறி சிகரத்தை தொட்டனர். இவர்களுடன் சென்ற சென்னை, தாம்பரம் ரோஷன் சிம்ஹா, 13, தந்தை பாபுவுடன், 4,720 மீட்டர் உயரம் வரை சென்றார். சிவவிஷ்ணு 5 வயதில் கிளிமாஞ்சரோ சிகரம் ஏறிய 3வது சாதனை யாளர் என்ற இடத்தை பிடித்தார். முத்தமிழ் செல்வி சிறுவனின் பெரியம்மா ஆவார். அவர், காரியாபட்டி ஜோகில்பட்டியை சேர்ந்தவர்.
03-Nov-2025