உள்ளூர் செய்திகள்

கிருஷ்ண ஜெயந்தி

அருப்புக்கோட்டை, செப். 8 - அருப்புக்கோட்டை புளியம்பட்டி ராதா கிருஷ்ண ராமானுஜ கூடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா ஆக. 27 ல் துவங்கி 10 நாட்கள் நடந்தது. முதல் நாள் பஜனை , திரு விளக்கு பூஜை, சொற்பொழிவு, தெம்மாங்கு கச்சேரி, சுவாமி புஷ்ப அலங்கார பவனி, கோலாட்டம், உறியடி, சிலம்பாட்டம், கொலு மேளம், நடன, நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன்தினம் இரவு கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த வழுக்கு மரத்தில் இளைஞர்கள் ஏறி பரிசு பொருட்களை தட்டி சென்றனர். அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கம்மவார் இளைஞர்கள் சார்பில், கிருஷ்ண ஜெயந்தி விழா குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை