உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / லேப் டெக்னீசியன் நிலை 2 பணியிடங்களை நிரந்தரமாக நிரப்பும் அறிவிப்புக்கு எதிர்பார்ப்பு

லேப் டெக்னீசியன் நிலை 2 பணியிடங்களை நிரந்தரமாக நிரப்பும் அறிவிப்புக்கு எதிர்பார்ப்பு

விருதுநகர்: அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளில் ஒப்பந்தத்தில் நிரப்பப்பட்ட லேப் டெக்னீசியன் நிலை 2 பணியிடங்களை நிரந்தரமாக நிரப்ப அறிவிப்பு வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளில் லேப் டெக்னீசியன் நிலை 2 பணியிடங்கள் ஒப்பந்தத்தில் நிரப்பும் அறிவிப்பு வெளியிடப்பட்டு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் 4 ஆண்டுகளை கடந்தும் இதுவரை 600 நிரந்தர பணியிடங்கள் இருந்தும் நிரப்பப்படாமல் தொகுப்பூதிய பணியாளர்களே தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். இந்த 600 பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையை தமிழக அரசு இதுவரை எடுக்கவில்லை. மாறாக தேசிய சுகாதார இயக்கம் திட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு நிதியில்தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. இவர்களுக்கான ஊதியம் உயர்வு, மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு போன்ற எந்த ஒரு சலுகைகளும் வழங்கப்படவில்லை. குடும்ப சூழ்நிலையால் குறைந்த தொகுப்பூதியத்தில் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளில் காலியாக உள்ள லேப் டெக்னீசியன் நிலை 2 பணியிடங்களை நிரந்தரமாக மருத்துவ பணிகள் தேர்வு வாரியத்தால் நிரப்பும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை