உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தொழிலாளர் சங்க கூட்டம்

தொழிலாளர் சங்க கூட்டம்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை காந்தி நகரில் தமிழ்நாடு இலவச அமரர் ஊர்தி மற்றும் தாய் சேய் நல ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதற்கு அருப்புக்கோட்டை மண்டல தலைவர் பிரபு தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் கணபதி, நிர்வாகி முனீஸ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், இலவச அமரர் ஊர்தி மற்றும் தாய் சேய் நல்ல ஊர்தி தொழிலாளர்களுக்கு 16 சதவிகித ஊதிய உயர்வு வழங்கவும், ஊர்திகளை முறையாக பராமரிப்பு செய்யவும் தீர்மானம் செய்யப் பட்டது. சங்க தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை