உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  மின்னல் தாக்கி தொழிலாளி பலி

 மின்னல் தாக்கி தொழிலாளி பலி

அருப்புக்கோட்டை-: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கட்டட வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி சவுந்தரபாண்டியன் 23, மின்னல் தாக்கியதில் பலியானார். அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி மேலத் தெருவை சேர்ந்த சந்திவீரன் மகன் சவுந்தர பாண்டியன். திருமண மாகாதவர். கட்டட தொழிலாளியான இவர் நேற்று அருப்புக்கோட்டை - திருச்சுழி ரோட்டில் உள்ள அலைபேசி ஷோரூம் மாடியில் பணி செய்து கொண் டிருந்தார். மாலை 4:30 மணிக்கு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததில் மின்னல் தாக்கி சவுந்தரபாண்டியன் சம்பவ இடத்திலேயே பலியானார். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை