மேலும் செய்திகள்
சுரங்க பாதைகளுக்கு மேற்கூரை
10-May-2025
விருதுநகர்; விருதுநகர் மாவட்டத்தில் முக்கிய கிராமங்களுக்கு செல்லும் ரயில்வே சுரங்கப்பாதைகள் வெயில் காலங்களில் மண் மேவி பரப்பியும், மழைக்காலத்தில் நீர் தேங்கியும் காணப்படுவதால் மக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இது தான் தற்போதைய நிலை என கூறும் அளவுக்கு ரயில்வே துறையின் அலட்சியத்தால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம் வழியாக மதுரை - செங்கோட்டை வழித்தடத்திற்கு ஒரு இருப்பு பாதையும், மதுரை - திருநெல்வேலி வழித்தடத்திற்கு ஒரு இருப்பு பாதையும் உள்ளது. இப்பாதை குறுக்கே செல்லும் கிராமங்களுக்கு தென்னக ரயில்வே சார்பில்சுரங்கப்பாதைகள் ஏற்படுத்தப்பட்டது. இப்பாதைகள் வலுவாக இருந்தாலும், இவற்றில் மழைக்காலங்களில் நீர் தேங்குவது பெரிய குறைபாடாக உள்ளது. ஆனால் மழைநீர் வெளியேறும் வகையில்தான் துளைகள்ஏற்படுத்தப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் தெரிவிக்கிறது. துவக்க காலக்கட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வந்த இந்த ரயில்வே சுரங்கப்பாதைகள் கடந்த 5 ஆண்டுகளாக மழைநீர் தேக்குமிடமாக மாறி உள்ளன. இதனால் மக்கள்தங்கள் கிராமங்களுக்கு நீரில் மூழ்கி கடந்து செல்லும் நிலை உள்ளது. வாகனங்கள் பழுதாவதாக குற்றம் சாட்டுகின்றனர்.இதே மழைக்காலம் முடிந்து வெயில் காலம் வந்து விட்டால் மண்மேவி பரப்பி காணப்படுகிறது. இதனால் சுரங்கப்பாதையில் இறங்கி ஏறும் வாகன ஓட்டிகள் சறுக்கி விபத்தை சந்திக்கின்றனர். இருவராக செல்லும் டூவீலர் ஓட்டிகள் தடுமாறினால் நிச்சயம் காயம் தான்.ரயில்வே நிர்வாகம் முன்பு இவற்றை முறையாக பராமரித்து வந்தது.தண்ணீர் வடிவதை கண்காணித்தது. வடியாவிட்டால், சரி செய்து அதற்கான வழியை ஏற்படுத்தியது. அதே போல் ஆண்டு தோறும் மண்மேவியதை அகற்றி, சுரங்கப்பாதையை பயன்பாட்டிற்கு ஏற்றதாக வைத்திருந்தது.தற்போது எதையுமே செய்வது கிடையாது. மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதை கண்டுக்காமல் மவுனம் காத்து வருகிறது.
10-May-2025