உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பெருமாள் கோயிலில் சட்ட தேரோட்டம்

பெருமாள் கோயிலில் சட்ட தேரோட்டம்

சிவகாசி: சிவகாசி வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் பிரமோற்ஸவ திருவிழாவை முன்னிட்டு சட்ட தேரோட்டம் நடந்தது.இக்கோயிலில் பிரமோற்ஸவ திருவிழா ஜன. 21 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. சுவாமிகளுக்கு அலங்கார சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை 10:00 மணிக்கும் இரவு 8:00 மணிக்கு சுவாமி ரத வீதி உலா நடந்தது. 9ம் திருவிழாவான நேற்று நடந்த சட்டத் தேரில் சுவாமிகள் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தார். இன்று மஞ்சள் நீராட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி