உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 50 சதவீத மானியத்தில் புல்வெட்டும் கருவிகள்

50 சதவீத மானியத்தில் புல்வெட்டும் கருவிகள்

விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: கால்நடைகள் தீவனங்களை வீண் செய்வதை தவிர்க்க, தீவனங்களை சிறு துண்டுகளாக நறுக்கி வழங்க 2025--26ம் ஆண்டு தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மின் புல்வெட்டும் கருவிகள் அரசால் 50 சதவீத மானியத்தில், 50 பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் பயன் பெறுவதற்கு குறைந்த பட்சம் 2 கறவைப் பசுக்கள் வைத்திருக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற திட்டங்களில் பயனாளியாக பயன்பெற்று இருத்தல் கூடாது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ