உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பிடிபட்ட நாய், பாம்புகளை அருகருகே விடுவது அலட்சியம்; lவிதிமுறையை பின்பற்றி செயல்பட எதிர்பார்ப்பு

பிடிபட்ட நாய், பாம்புகளை அருகருகே விடுவது அலட்சியம்; lவிதிமுறையை பின்பற்றி செயல்பட எதிர்பார்ப்பு

மாவட்டத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. மேலும் கோடைக்கு முன்பே அடிக்கும் வெயிலால் தண்ணீர் கிடைக்காத நாய்கள் பகல் நேரங்களில் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இரண்டு நாட்கள் முன்பு கூட விருதுநகர் நான்கு வழிச்சாலையில் நாய் குறுக்கே வந்ததால் டூவீலர் விபத்துக்குள்ளானதில் கள்ளிக்குடியை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர் பலியானார்.நாய்களால் ரேபிஸ் பாதிப்பு ஏற்படுவது போல், குறுக்கே வரும் போது விபத்து ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இவ்வாறு சுற்றித்திரியும் நாய்கள் பற்றி மக்கள் தொடர் புகார்கள் அளித்தால் தான் உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கின்றன. அதுவும் தற்போது ஊராட்சிகளில் சிறப்பு அலுவலர்கள் செயல்படுவதால் அழுத்தத்தோடு புகார் அளித்தால் தான் நடவடிக்கை எனும் சூழல் உள்ளது. இவ்வாறு நடவடிக்கை எடுத்து நாய்களை பிடித்தாலும், ஒரு பகுதியில் பிடிக்கும் நாய்களை மற்ற பகுதிகளில் விட்டு விட்டு செல்கின்றனர்.இது மாவட்டம் முழுவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் நாய்கள் தொல்லை குறையாததாகவே உள்ளது. இதே போல் வெயிலின் தாக்கம் காரணமாக பாம்புகளும் பகல் நேரங்களில் புதர்களிலே தங்கி விட்டு மாலை நேரங்களில் வெளியேறும் போது குடியிருப்புகளை நோக்கி படையெடுப்பதும் அதிகரித்துள்ளது. இது போன்ற நேரங்களில் பாம்பை கண்டு அஞ்சி தீயணைப்பு துறையினரை மக்கள் நாடுகின்றனர்.கடந்த வாரம் இது போன்று அழைத்த புகாருக்கு மீட்பு பணிக்கு சென்ற தீயணைப்புத்துறையினர் பஜார் போலீஸ் ஸ்டேஷன் அருகே பிடித்த பாம்பை அதே பகுதி கண்மாயின் சர்வீஸ் ரோடு பகுதியில் விட்டு விட்டு சென்றனர். இப்பகுதியில் ஆள்நடமாட்டமில்லை என்றாலும், வாகனங்கள் அடிக்கடி சென்று வருகின்றன. காட்டுப்புறங்களில் விடுவது தான் சரியாக இருக்கும் என மக்கள் புலம்பினர். எனவே பிடிபட்ட நாய்களையும், மீட்ட பாம்புகளையும் விதிமுறைப்படி அப்புறப்படுத்த வேண்டும். நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும். பாம்புகளை காட்டுப்புறங்களில் விடுவதை உறுதி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ