மேலும் செய்திகள்
சதுரகிரியில் பவுர்ணமி வழிபாடு
11-Jun-2025
ஸ்ரீவில்லிபுத்துார்: ஜூலை 24ல் ஆடி அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பல ஆயிரம் பக்தர்கள் மலையேற உள்ளனர். அதனை முன்னிட்டு அனைத்து நவீன மருத்துவ கருவிகளுடன் கூடிய உயிர் காக்கும் சிகிச்சை மையங்களை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு தற்போது தினசரி சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் விடுமுறை நாட்கள், பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாட்களில் பல்லாயிரம் பக்தர்கள் மலையேறுகின்றனர்.கடந்த காலங்களில் அவர்களில் சிலர் மூச்சுத் திணறல், மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளனர். இதற்கு தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து கோயில் வரை எந்தவித மருத்துவ மையங்களோ, முதல் உதவி சிகிச்சை மையங்களோ இல்லாததே காரணம்.ஜூலை 24ல் ஆடி அமாவாசை வழிபாடு நடக்க உள்ளது. இதில் 50 ஆயிரம் முதல் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வரை மலை ஏற வாய்ப்புள்ளது.இவ்வாறு வரும் பக்தர்களின் நலன் கருதி தாணிப்பாறை மலை அடிவாரத்தில் இருந்து கோயில் வரை 500 மீட்டருக்கு ஒரு இடம் வீதம், அனைத்து நவீன கருவிகளுடன் கூடிய உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சை மையங்களை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சதுரகிரி பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
11-Jun-2025