உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  தொழிலாளி கொலை வாலிபருக்கு ஆயுள்

 தொழிலாளி கொலை வாலிபருக்கு ஆயுள்

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சொக்கநாதன்புத்தூர் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் இசக்கி முத்து 32, விறகு வெட்டும் தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி 27. லோடுமேன். 2018ல் இருவரும் சேர்ந்து மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் மாடசாமியை மது பாட்டிலால் இசக்கிமுத்து குத்தினார். இச்சம்பவத்திற்கு பழிக்கு பழி வாங்குவதற்காக 2020 ஆக.23 இரவு இசக்கி முத்துவை அரிவாளால் வெட்டி மாடசாமி கொலை செய்தார். மாடசாமியை சேத்துார் போலீசார் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் மாடசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஜெயக்குமார் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் திருமலையப்பன் ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ