உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரயிலில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல்

ரயிலில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல்

விருதுநகர் : விருதுநகர் ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையுடன் இணைந்து பெங்களூரு - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை செய்தபோது மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சிங்கத்தாகுறிச்சி கிழக்குத் தெருவைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் ரமேஷ் 36, வைத்திருந்த சாக்கு பையை சோதனை செய்தபோது மது பாட்டில்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பெங்களூருவில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி தமிழகத்தில் அதிகமான விலைக்கு விற்பனை செய்வதற்காக எடுத்து வந்ததாகவும் மணியாச்சி ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி செல்ல இருந்ததாகவும் கூறினார். அதனைத் தொடர்ந்து அவர் வைத்திருந்த 24 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். விருதுநகர் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி