உள்ளூர் செய்திகள்

இலக்கிய விழா

ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் நூலகத்தின் 150 வது ஆண்டு விழாவை முன்னிட்டு பெண்மையை போற்றுவோம் என்ற தலைப்பில் இலக்கிய விழா நடந்தது. பள்ளி பொருளாளர் அம்சவேணி தலைமை வகித்தார். ஆசிரியை அருள் மேரி வரவேற்றார். விழாவில் பெண் பேச்சாளர்கள் மேதினி பிரபு, முத்துலட்சுமி, லஷ்மி கிருஷ்ணன், ஆண்டாள், வழக்கறிஞர் ஜான்சி பேசினர். மாவட்ட அளவில் நடந்த கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியை தெய்வானை நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை