மேலும் செய்திகள்
குளிர்கால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி ஜரூர்
10-Dec-2024
கால்நடை கணக்கெடுப்பு ஆய்வு கூட்டம்
29-Dec-2024
விருதுநகர்; 21வது தேசிய கால்நடை கணக்கெடுப்பு பணியில் வட மாநிலங்களில் ஏற்பட்ட தாமதத்தால் கூடுதலாக ஒரு மாதம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பணிகளை துரிதப்படுத்த மாவட்டங்களுக்கிடையே ஒப்பீடு அறிக்கை தயாரிக்கப்படுகிறது.ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேசிய கால்நடை கணக்கெடுப்பு பணி நடக்கிறது. 2019 ல் 20 வது கால்நடை கணக்கெடுப்பு பணி நடந்தது. அதன் பிறகு 2024ல் செப்டம்பரில் 21வது கால்நடை கணக்கெடுப்பு பணி துவங்க திட்டமிடப்பட்டு அக்டோபரில் துவங்கியது. இக்கணக்கெடுப்பு பணி 'அலைபேசி ஆப்' வழியாக எடுக்கப்படுகிறது. இதற்காக தமிழகத்தில் கால்நடை டாக்டர்கள், கணக்கெடுப்பாளர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.ஆனால் பயிற்சிகளை முடிக்க தாமதம் ஏற்பட்டதால் பணிகளை துவங்கிய போது மெதுவாக நடந்தாலும், தற்போது பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.ஆனால் வட மாநிலங்களில் டாக்டர்கள், கணக்கெடுப்பாளர்களின் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால் ஏற்கனவே திட்டமிட்டப்படி பிப்ரவரியில் இப்பணிகளை முடிக்க முடியாத நிலையுள்ளது. இதனால் கூடுதலாக ஒரு மாதம் பணிகளை நீட்டிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் இப்பணிகளை துரிதப்படுத்த மாவட்டங்களுக்கிடையே ஒப்பீடு அறிக்கை தயாரிக்கப்பட்டு எந்தெந்த மாவட்டங்களில் விரைவாக பணிகளை செய்து வருகின்றனர் என வகைப்படுத்தப்படுகிறது. தற்போது வரை 36 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.கோமாரி நோய் தடுப்பூசி பணிகள் ஒரு வாரத்திற்குள் முடிக்கப்படும். இப்பணி முடிந்தவுடன் கணக்கெடுப்பு பணி தீவிரப்படுத்தப்படும்.
10-Dec-2024
29-Dec-2024