உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசியில் வாடகை செலுத்தாத கடைகளின் பூட்டை உடைத்து பொருட்கள் அகற்றம்

சிவகாசியில் வாடகை செலுத்தாத கடைகளின் பூட்டை உடைத்து பொருட்கள் அகற்றம்

சிவகாசி : சிவகாசி பஸ் ஸ்டாண்டில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் பல மாதங்களாக வாடகை செலுத்தப்படாததால் அதன் பூட்டை உடைத்து உள்ளிருந்த பொருட்கள் அகற்றப்பட்டது. சிவகாசி பஸ் ஸ்டாண்டில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்கள் உள்ளது. இதில் உள்ள கடைகள் ஏலம் மூலமாக வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் மூன்று கடைகளை ஏலம் எடுத்த நபர்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பல மாதங்களாக வாடகை செலுத்தவில்லை. இது குறித்து பல முறை தகவல் தெரிவித்தும் கடையை ஏலம் எடுத்தவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து கமிஷனர் சரவணன், மாநகர திட்டமிடுனர் மதியழகன், உதவி கமிஷனர் வரலட்சுமி, நகரமைப்பு ஆய்வாளர் சுந்தரவள்ளி, மேற்பார்வையாளர் முத்துராஜ், போலீசார், அதிகாரிகள் முன்னிலையில் கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளிருந்த பொருட்கள் அகற்றப்பட்டு பழைய நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டது. கமிஷனர் கூறுகையில், கடையில் ஏலம் எடுத்த நபர்கள் பல மாதங்களாக வாடகை செலுத்தவில்லை. இதுகுறித்து பலமுறை தகவல் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. எனவே கடையில் இருந்த பொருட்கள் அகற்றப்பட்டது. இக்கடைகளுக்கு மீண்டும் ஏலம் விடப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி