சர்வீஸ் ரோட்டில் லாரிகள் போக்குவரத்திற்கு இடைஞ்சல்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் சர்வீஸ் ரோட்டில் லாரிகள் நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுகிறது. அருப்புக்கோட்டை காந்தி நகர் மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் சர்வீஸ் ரோடுகள் உள்ளன. இந்த ரோடுகள் வழியாக சுற்றியுள்ள கிராம மக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்லும். மதுரையை நோக்கிச் செல்லும் சர்வீஸ் ரோடு பகுதியில் வாகன ஒர்க்ஷாப்கள் அதிகம் உள்ளன. இங்கு லாரிகள் கனரக வாகனங்கள் பழுதுகளை சரி செய்ய சர்வீஸ் ரோட்டில்அணிவகுத்து நிற்கின்றன. இதனால் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுகிறது.போக்குவரத்து போலீசாரும் இதை கண்டும் காணாமல் உள்ளனர். சர்வீஸ் ரோட்டில் வாகனங்களை நிறுத்தி பழுது நீக்க கூடாது என ஒர்க் ஷாப் வைத்துள்ளவர்களை அறிவுறுத்துவதும் இல்லை. சர்வீஸ் ரோட்டில் வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கையும் அபராதமும் போக்குவரத்து போலீசார் விதிக்க வேண்டும்.