உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / எடை குறைவான முட்டை; நிறுவன ஒப்பந்தம் ரத்து

எடை குறைவான முட்டை; நிறுவன ஒப்பந்தம் ரத்து

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களுக்கு எடை குறைவான முட்டை சப்ளை செய்த நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.இம்மாவட்டத்தில் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் பள்ளி சத்துணவு மையங்களுக்கு முட்டை ஒப்பந்ததாரரால் வினியோகம் செய்யப்பட்ட முட்டைகளின் எடை குறித்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஜெகதீசன் ஜூலை 18ல் பள்ளி சத்துணவு மையங்களில் ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது முட்டைகளின் எடை குறைவாக இருந்தது தெரிய வந்தது. இதனால் முட்டை வினியோக ஒப்பந்ததாரர் சஷ்டிகுமார் இம்மாவட்டத்திற்கு தற்காலிகமாக 3 மாதங்களுக்கு முட்டை வினியோகம் செய்வதை நிறுத்தி வைத்து மாற்று நிறுவனத்தின் மூலம் முட்டை வினியோகத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.சாத்துார் சின்னக்கொல்லப்பட்டி ஊராட்சி தெற்கூர் அரசு உயர்நிலைப்பள்ளியை ஆய்வு செய்த போது ஆக., 23ல் வினியோகிக்கப்பட்ட முட்டைகள் சிறியதாக இருந்தது கண்டறியப்பட்டது. பத்து முட்டைகளில் சராசரி எடையை சரிபார்த்த போது 390.70 கிராம் மட்டுமே இருந்தது. இம்முட்டைகளை திருப்பி அனுப்ப சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முட்டைகள் விநியோகிக்கும் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி