உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி., வனப்பகுதியில் இறந்து கிடந்த ஆண் யானை

ஸ்ரீவி., வனப்பகுதியில் இறந்து கிடந்த ஆண் யானை

ஸ்ரீவில்லிபுத்துார்:மேகமலை புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியான விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் வனப்பகுதியில் விரியன் கோயில் பீட்டில் ஆண் யானை இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் வனப்பகுதிகளுக்கு இடைப்பட்ட மலைப்பகுதி அடிவாரத்தில் உள்ள தோப்புகளுக்கு கடந்த சில நாட்களாக யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இந்நிலையில் நேற்று காலை விரியன் கோயில் பீட் வனப்பகுதியில் ஒரு ஆண் யானை இறந்து கிடந்ததை வனத்துறையினர் பார்த்தனர். புலிகள் காப்பக துணை இயக்குனர் முருகன் உட்பட வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள், வனவிலங்கு தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். மருத்துவர்கள் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் அங்கேயே வனத்துறையினர் அடக்கம் செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு தான் யானையின் உயிரிழப்பிற்கான காரணம் தெரிய வரும், என துணை இயக்குனர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !