உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மல்லாங்கிணர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்படாத ஆர்.ஓ., மிஷின்

மல்லாங்கிணர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்படாத ஆர்.ஓ., மிஷின்

காரியாபட்டி: மல்லாங்கிணர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆர்.ஓ., குடிநீர் மிஷின் பயன்பாடின்றி கிடப்பதால் குடிநீர் கிடைக்காமல் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். மல்லாங்கிணர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள், கர்ப்பிணிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டனர். இதையடுத்து அங்கு ஆர்.ஓ., மினரல் குடிநீர் மிஷின் அமைக்கப்பட்டது. நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றாக இயங்கி வந்த நிலையில் தற்போது பழுதாகி சேதம் அடைந்து கிடக்கிறது. நோயாளிகள் கர்ப்பிணி, பெண்கள் குடிநீர் கிடைக்காமல் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. கிராமப்புற பெண்கள் குடிநீர் வாங்க வசதியின்றி நாள் முழுவதும் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனைப் போக்க ஆர்.ஓ.,மினரல் குடிநீர் மிஷினை பழுது நீக்கி, பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி