மேலும் செய்திகள்
இளைஞர்களை ஊக்குவிக்க விளையாட்டு மைதானம் அவசியம்
04-Sep-2025
காரியாபட்டி: காரியாபட்டி ஆவியூரில் பெரிய கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் கூடி நிகழ்ச்சியை கண்டு களித்தனர். நிகழ்ச்சி முடியும் தருவாயில் ஒலிக்கப்பட்ட பாடலுக்கு மது போதையில் இருந்த இளைஞர்கள் பலர் ஆட்டம் போட்டனர். இதனை ஆவியூர் போலீசார் கண்டித்தனர். இதையடுத்து போலீசாருக்கும் இளைஞர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. ஒரு வழியாக சமாதானம் செய்து இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். ஆனாலும் இளைஞர்கள் தொடர்ந்து போலீசாருடன் தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த போலீசார், பணி செய்யவிடாமல் தடுத்ததாக ஒருவர் மீது வழக்கு பதிவு செய்து, பிரதீப்பை 26, கைது செய்தனர். மற்றவர்கள் குறித்து ஆவியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
04-Sep-2025