உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆம்புலன்ஸை திருட முயன்றவர் கைது

ஆம்புலன்ஸை திருட முயன்றவர் கைது

சாத்துார்: சாத்துார் கீழத்தாயில் பட்டி வெற்றிலையூரணி குயில் பயர் ஒர்க்ஸ் இண்டஸ்ட்ரிஸ் சில் நேற்று மதியம் 12:00 வெடி விபத்து ஏற்பட்டது. இதில் யாரும் காயம் அடையவில்லை. இந்நிலையில் தனியார், அரசு ஆம்புலன்ஸ்கள் மீட்பு பணிக்காக வரவழைக்கப்பட்டிருந்தது. அப்போது அப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த மடத்துப்பட்டி ராஜிவ் காலனியைச் சேர்ந்த மாரிமுத்து, 30. திடீரென ஆம்புலன்ஸ் ஒன்றை எடுத்துக்கொண்டு தப்பி ஓட முயன்றார்.சுதாரித்த மக்கள் அவரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ