மேலும் செய்திகள்
ஐயப்ப சாமிக்கு மண்டலாபிஷேக விழா
26-Dec-2024
விருதுநகர்: விருதுநகரில் ஐயப்ப சுவாமி மண்டல பூஜை அன்னதான விழா குழு சார்பில் மண்டல பூஜையை முன்னிட்டு லட்சார்ச்சனை, அன்னதானம், ரத்ததானம் நடந்தது. சுவாமிக்கு அன்னாபிஷேகம், சொர்ணாபிஷேகம், தேன், சந்தனம், நெய் உட்பட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.விசேஷ தீபாராதனை நடந்தது. அன்னதானம் நடந்தது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ரத்த தானம் வழங்கினர். மாலை பஜனை நடந்தது. விருதுநகர் வாலசுப்பிரமணியசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள ஐயப்ப சுவாமிக்கு லட்சார்ச்சனை நடந்தது. சுவாமி வெள்ளிப்புலி வாகனத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார். 21 வகை அபிஷேகங்களுடன், 108 சங்காபிஷேகமும் செய்யப்பட்டது.
26-Dec-2024