திருத்தங்கல்லில் மாரத்தான் போட்டி
சிவகாசி : சிவகாசி அருகே திருத்தங்கல்லில் ஹட்சன் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மாவட்ட நிர்வாகம் சார்பில் நீர் நிலைகளை புனரமைத்தல் குறித்து ஒவ்வொரு நீர் துளியையும் சேமிப்பது ஒவ்வொருவரின் கடமை என்ற தலைப்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். சிவகாசி சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தன்னார்வலர்கள். பொதுமக்கள் என பலரும் போட்டியில் கலந்து கொண்டனர்.