உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாசில்லா ஸ்ரீவில்லிபுத்துார்

மாசில்லா ஸ்ரீவில்லிபுத்துார்

மண்ணில் மாசுக்கள் அதிகரித்து வரும் இன்றைய காலத்தில் அதனை அகற்றியும், எதிர்கால நலன் கருதி மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர் ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் பள்ளி எகோ கிளப், என்.எஸ்.எஸ். மாணவர்கள்.இன்றைய அறிவியல் யுகத்திலும், அவசர உலகிலும் மண்ணில் மாசுக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதரும் தங்களால் முடிந்த அளவுக்கு மாசுக்களை அதிகரிக்கத்தான் செய்கிறார்களே தவிர மாசில்லாத சூழலை ஏற்படுத்த யாரும் முன் வரவில்லை. இதனால் ஒவ்வொரு உள்ளாட்சி பகுதிகளிலும் தினமும் டன் கணக்கில் மக்கும், மக்காத குப்பைகளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை மிகுந்த சிரமத்திற்கு மத்தியில்தான் தூய்மை பணியாளர்கள் தரம் பிரித்து வாங்குகின்றனர். அதிலும் அதிகரிக்கும் பாஸ்ட் புட் கலாச்சாரம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெரும் சவாலாக விளங்குகிறது. இதனால் ஒவ்வொரு நகரின் தெருமுனையிலும் குப்பைகள் கொட்டப்பட்டு மாசுக்கள் அதிகரித்த வண்ணம் வருகிறது.அதேபோல் அதிகரித்து வரும் போக்குவரத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலைகள், 4 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இதற்காக நூற்றாண்டு மரங்கள் எல்லாம் வெட்டி அகற்றப்பட்டுள்ளது.மேலும் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலில் விளை நிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக மாறி வருகிறது. இதனால் மண்ணில் புவி வெப்பமும் மாசுக்களும் அதிகரித்து, மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இந்நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் என ஏராளமானோர் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் அரும்பணியில் பல்வேறு நகரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் பள்ளியில் எகோ கிளப், என்.எஸ்.எஸ் மாணவர்கள் மாசுக்கள் அகற்றும் பணியிலும், மரக்கன்றுகள் நடும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.அத்திகுளம் செங்குளத்தில் ஊருணியை சுற்றி மரக்கன்றுகள் நட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகின்றனர். செண்பகத் தோப்பு அடிவாரத்தில் இருந்து காட்டழகர் கோயிலுக்கு செல்லும் வரை உள்ள மலைப்பாதையில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்தி உள்ளனர்.மேலும் விதைப்பந்துகள் வனப்பகுதியில் துாவப்பட்டு மரக்கன்றுகள் வளர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.மேலும் அப்துல் கலாமின் பசுமை இந்தியா உருவாக்கும் கனவினை நிறைவேற்றும் பொருட்டு மரக்கன்றுகள் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர்.இதேபோல் ஒவ்வொரு தெருவிலும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மாசுக்களை அகற்றினாலே தெருக்கள் மட்டுமின்றி நகரங்களும் மாசில்லா நகரமாக உருவாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை