மேலும் செய்திகள்
ஸ்ரீவி., கோயிலில் உண்டியல் திறப்பு
22-Aug-2025
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் நேற்று உண்டியல் எண்ணும் பணி நடந்தது. ஹிந்து சமய அற நிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனுக்காக காணிக்கை செலுத்திய உண்டியல் பணம், அறநிலையத்துறை ஆய்வாளர் மணிபாரதி, கோவில் நிர்வாக அதிகாரி வேலுச்சாமி, அருப்புக்கோட்டை சார் பதிவாளர் அலுவலர் ஸ்ரீகாந்த் முன்னிலையில் பணம் எண்ணப்பட்டது. கோயில் ஊழியர்கள் பணத்தை எண்ணினர். பக்தர்கள் செலுத்திய பணம் மற்றும் நாணயம் மொத்தம் 1 லட்சத்து 57 ஆயிரத்து 667 ரூபாயும், 37 கிராம் தங்கம், 252 கிராம் வெள்ளி காணிக்கையாக வந்துள்ளது என அதிகாரிகள் கூறினர்.
22-Aug-2025