உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மைக் செட் ஊழியரை கொலை செய்து சாக்குமூடையில் கட்டி தெருவில் வீச்சு

மைக் செட் ஊழியரை கொலை செய்து சாக்குமூடையில் கட்டி தெருவில் வீச்சு

ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தைப்பேட்டை தெருவை சேர்ந்த மைக் செட் ஊழியர் பிரகாைஷ 45, கொலை செய்து சாக்கு மூடையில் கட்டி தெருவில் வீசி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தைப்பேட்டை தெருவை சேர்ந்தவர் டொமினிக் 70, மைக் செட் நடத்தி வருகிறார். இவரது மூத்த மகன் பிரகாஷூக்கு திருமணமாகவில்லை. தந்தைக்கு உதவியாக மைக் செட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். நேற்று அதிகாலை 5:00 மணி அளவில் சந்தைப்பேட்டை தெருவில் தோமா என்பவரின் வீட்டின் அருகில் உடலில் ரத்த காயங்களுடன் பிரகாஷ் கொலை செய்யப்பட்டு ஒரு சாக்கு மூடையில் கட்டப்பட்டு கிடந்தார்.ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். எஸ்.பி., கண்ணன், டி.எஸ்.பி., ராஜா சம்பவயிடத்தை பார்வையிட்டனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தேடியதில் யாரும் சிக்கவில்லை. இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை