உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரேஷன் அரிசி, துவரம் பருப்பு கடத்திய மினிலாரி கவிழ்ந்தது

ரேஷன் அரிசி, துவரம் பருப்பு கடத்திய மினிலாரி கவிழ்ந்தது

திருச்சுழி: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே, கமுதி ரோட்டில் சேதுபுரத்தில் நேற்று மதியம் 12:00 மணிக்கு ரேஷன் அரிசி, துவரம் பருப்பு மூடைகளை ஒரு மினி லாரியில் கடத்தி வந்தனர். வளைவில் திரும்பும் போது லாரி கவிழ்ந்து மூடைகள் ரோட்டில் சிதறின. லாரியில் வந்தவர்கள் ஓடி விட்டனர்.திருச்சுழி தாசில்தார் சிவக்குமார், டி.எஸ்.ஓ., முருகன், துணை தாசில்தார் சிங்கராஜ் ஆகியோர், 4 டன் மூடைகளை பறிமுதல் செய்து, தமிழ்பாடி நுகர்பொருள் வாணிப கோடவுனுக்கு அனுப்பினர். மேலும், கவிழ்ந்த மினி லாரியை திருச்சுழி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !