உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி., ரயில்வே ஸ்டேஷனுக்கு மினிபஸ் வசதி

ஸ்ரீவி., ரயில்வே ஸ்டேஷனுக்கு மினிபஸ் வசதி

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷனுக்கு மக்கள் வந்து செல்ல வசதியாக 2 மினிபஸ்கள் இயக்க வழித்தடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் மினிபஸ்கள் இயக்கப்படவுள்ளது.தமிழகத்தில் கிராமப்புற மக்கள் போதிய பஸ் வசதி பெறுவதற்காக விரைவில் மினி பஸ்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் 23, அருப்புக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் 2, சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் 5, ஸ்ரீவில்லிபுத்துார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் 12, ராஜபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 14 என மொத்தம் 56 வழித்தடங்களில் இயக்க வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இதில் ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷனுக்கு 2 மினி பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதன்படி ஸ்ரீவில்லிபுத்துார் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு பஸ் புறப்பட்டு திருப்பாற்கடல், தாலுகா ஆபிஸ், ரயில்வே ஸ்டேஷன், கடம்பன்குளம், கரைவளைந்தான் பட்டி வழியாக பூவாணி மீனாட்சிபுரத்திற்கு ஒரு மினி பஸ்சும், இந்திரா நகர் லட்சுமி நாராயணா திருமண மண்டபத்தில் இருந்து புறப்பட்டு பழைய பஸ் ஸ்டாண்ட், மாதாங்கோயில் தெரு, மடவார் வளாகம், தாலுகா ஆபிஸ், ரயில்வே ஸ்டேஷன், கோர்ட், சித்தாலம்புத்தூர், அத்திகுளம் வழியாக பொட்டல் பட்டிக்கு மற்றொரு மினி பஸ்சும் இயக்கப்படவுள்ளது. இதன் மூலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை