உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / புது பஸ் ஸ்டாண்ட் டிசம்பர் இறுதியில் பயன்பாட்டிற்கு வரும் அமைச்சர் தகவல்

புது பஸ் ஸ்டாண்ட் டிசம்பர் இறுதியில் பயன்பாட்டிற்கு வரும் அமைச்சர் தகவல்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் கட்டப்பட்டு வரும் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் டிசம்பர் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.அவர் கூறியதாவது: அருப்புக்கோட்டை மதுரை ரோட்டில் உள்ள புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டி பல ஆண்டுகள் ஆன நிலையில் இடிக்கப்பட்டு 8 கோடி ரூபாய் நிதியில் நவீன அனைத்து வசதிகளுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு வருகிறது. இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. டிசம்பர் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.பஸ் ஸ்டாண்ட் அருகில் செல்லும் இ.3 ரோடு 75 சதவிகித பணிகள் முடிந்த நிலையில், ஒரு பகுதி கோர்ட் வழக்கில் இருப்பதால் அதுவும் விரைவில் தீர்வு காணப்பட்டு பயன்பாட்டிற்கு வரும். நகராட்சி புதிய தாமிரபரணி குடிநீர் திட்டம் மூலம் கூடுதல் குடிநீர் நகரில் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் கசிவு ஏற்பட்டுள்ளதால் சரி செய்யப்படும் பணிகளும் நடந்து வருகிறது, என்றார்.உடன் நகராட்சி தலைவர் சுந்தரலட்சுமி, துணைத் தலைவர் பழனிச்சாமி, நகரச் செயலாளர் மணி, முன்னாள் நகராட்சி தலைவர் சிவபிரகாசம் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ