மேலும் செய்திகள்
விநாயகர் சிலை தயாரிப்பு கட்டுப்பாடுகள் விதிப்பு
19-Aug-2025
நரிக்குடி : நரிக்குடி வீரசோழன் அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுமான பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். மாணவர்களுடன் உரையாடிய போது, பிளஸ்1 மாணவி வெயில்கனி, பிளாஸ்டிக் பயன்பாட்டால் இயற்கைக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கேள்வி எழுப்பினார். அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: பிளாஸ்டிக் பயன்பாடு அதன் தன்மை, அடர்த்தியை பொறுத்து இரு வகைகளாக உள்ளது. இதற்கு மைக்ரான் அளவு அடிப்படையில் ஒரு வரையறை உள்ளது. அதன்படி குறிப்பிட்ட அளவு மைக்ரான் கொண்ட பிளாஸ்டிக் பைகள் மட்டுமே பயன்பாட்டில் அனுமதிக்கப்படுகின்றன. இருப்பினும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும். ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், பொருட்களை அரசு தடை செய்துள்ளது. இதற்கு மாற்றாக துணிப்பைகள், மஞ்சப்பைகள், விரைவில் மக்கும் பொருட்களை பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கிறோம். அறிவியல், உள்ளிட்ட பல துறைகளில் பிளாஸ்டிக் முக்கிய பங்கு வகிக்கிறது. அனுமதிக்கப்பட்ட மைக்ரான் அளவு கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும், என்றார். மிகவும் நேர்த்தியாக கேள்வி கேட்ட மாணவியை பாராட்டினார்.
19-Aug-2025