உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஒரு முறையாவது வேங்கை வயல் மக்களை சந்தித்து ஆறுதல் கூறியிருப்பாரா விஜய் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் கேள்வி

ஒரு முறையாவது வேங்கை வயல் மக்களை சந்தித்து ஆறுதல் கூறியிருப்பாரா விஜய் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் கேள்வி

சாத்துார்: ''ஒரு முறையாவது வேங்கைவயலுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியிருப்பாரா த.வெ.க., தலைவர் விஜய்,'' என, விருதுநகர் மாவட்டம் சாத்துாரில் வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.அவர் கூறியதாவது: கருணாநிதி முதல்வராக இருந்த காலத்திலும், தற்போது ஸ்டாலின் முதல்வராக உள்ள காலத்திலும் தி.மு.க.,வை மையப்படுத்தி தான் பிற எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டிய நிலை உள்ளது.புதியதாக கட்சி துவங்கியுள்ள த.வெ.க., தலைவர் விஜய் வேங்கைவயல் பிரச்னை குறித்து பேசியுள்ளார். அங்கு போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. ஒரு முறையாவது வேங்கை வயலுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியிருப்பாரா அவர்.புயல் மழையால் மக்கள் பாதிக்கப்பட்ட போது முதல்வர் ஸ்டாலின் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்களை வழங்கினார். இவரைப்போல் கட்சி அலுவலகத்திற்கு மக்களை அழைத்து வந்து நிவாரணப்பொருட்கள் வழங்கவில்லை. இவர் தான் போட்டோ சூட் அரசியல் செய்கிறார்.வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதியிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும் சூழ்நிலை உள்ளது.விஜய் தன் ரசிகர்களை நம்பி அரசியலில் இறங்கியுள்ளார். விஜய்யை அரசியல்வாதியாக தி.மு.க., அங்கீகாரம் செய்யவில்லை. அவர் குறித்து கவலைப்படவும் தேவையில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை