மேலும் செய்திகள்
திட்ட பணிகள் அமைச்சர் ஆய்வு
12-Sep-2025
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சியில் பல ஆண்டுகளாக கிடப்பில் போடபட்ட இ. 3 ரோடு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தெரிவித்தார். அருப்புக்கோட்டை நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்து ரயில்வே பீடர் ரோடு, எஸ். பி.கே., கல்லூரி ரோடு வழியாக மதுரை - - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையை பிடிக்கும் வகையில் இ.3 ரோடு அமைக்க 10 ஆண்டுகளுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டு ஒரு பகுதியில் சாலை அமைக்கப்பட்டு, மற்றொரு பகுதியை கையகப்படுத்தாததால், பணி கிடப்பில் போடப்பட்டது. இந்தச் சாலை அமைந்தால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். மக்களும், சமூக அமைப்புகளும் இதுகுறித்து கோரிக்கை வைத்த நிலையில், நேற்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் இ.3 ரோடு வரும் வழியை ஆய்வு செய்தார். தாசில்தார் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு உரிய தீர்வு எடுக்கப்பட்டு ரோடு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என உறுதி அளித்தார்.ஆய்வில், வருவாய்த்துறை அதிகாரிகள், நகராட்சி கமிஷனர் ராஜமாணிக்கம், துணைத் தலைவர் பழனிச்சாமி, முன்னாள் நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
12-Sep-2025