மேலும் செய்திகள்
திருப்பூர் வருகையை முதல்வர் தவிர்த்தாரா?
12-Aug-2025
காரியாபட்டி; காரியாபட்டி எஸ்.மறைக்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை முறையாக ஏற்பாடு செய்யாத அதிகாரிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு கடிந்து கொண்டார். காரியாபட்டி எஸ்.மறைக்குளத்தில் சூரனூர், துலுக்கன்குளம் உள்ளிட்ட பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். மகளிர் உரிமைத் தொகைக்காக ஏராளமானோர் விண்ணப்பிக்க வந்தனர். வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனை கண்ட அமைச்சர் அதிகாரிகளை அழைத்து, ''சரியான இடத்தை தேர்வு செய்யாமல் கோயிலில் ஏற்பாடு செய்தது யார். யாரும் ஒழுங்காக வேலை செய்யவில்லை,'' என எச்சரித்தார். கலெக்டருக்கு அலைபேசியில் தகவல் தெரிவித்து, ''முகாம் நடைபெறும் இடங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மக்கள் சிரமம் இல்லாமல் மனுக்கள் கொடுப்பதற்கு தகுந்த இடங்களை தேர்வு செய்ய வேண்டும். மனுக்களுக்கு தனி கவனம் செலுத்த வேண்டும்,'' என தெரிவித்தார். பின் பி.டி.ஓ., தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்து, ''எந்த இடையூறும் ஏற்படுத்தாமல் மனுக்களை வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்த கலெக்டர் சுகபுத்ரா ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
12-Aug-2025