ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடை-- வழங்கிய எம்.எல்.ஏ.,
ராஜபாளையம் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராஜபாளையம் தி.மு.க., எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் தனது மாத ஊதியத்தில் 231 ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கினார். ராஜபாளையம் எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் பதவி ஏற்றது முதல், தனது ஊதியத்தை பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள், ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் இல்லம் என பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினரும் உதவும் விதமாக வழங்கி வருகிறார். இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு 9வது ஆண்டாக தனது 5 மாத ஊதியமான ரூ.5 லட்சத்து 25 ஆயிரத்தை 3 ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை சேர்ந்த 231 குழந்தைகளை தனியார் ஜவுளி கடைக்கு வரவழைத்து விருப்பமான புத்தாடைகளை எடுத்து கொள்ள செய்தார். நகர் செயலாளர்கள் மணிகண்ட ராஜா, ராமமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.