உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நுாறு நாள் திட்டத்தில் சம்பளம் 7 வாரங்களாக கிடைக்கவில்லை எம்.பி., குற்றச்சாட்டு

நுாறு நாள் திட்டத்தில் சம்பளம் 7 வாரங்களாக கிடைக்கவில்லை எம்.பி., குற்றச்சாட்டு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நுாறு நாள் திட்டத்தில் 7 வாரங்களாக சம்பளம் வழங்கவில்லை என எம்.பி., மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டினார்.மேலும் அவர் கூறியதாவது: நுாறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் 7 வாரங்களாக சம்பளம் கிடைக்கவில்லை. ரூ.58 கோடி நிலுவை பணம் உள்ளது. இதை மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். மத்திய அரசு நுாறு நாள் வேலை திட்டத்தை முடக்கும் பணியை செய்கிறது. தெருநாய் பிரச்னை அதிகளவில் உள்ளது. மத்திய அரசின் எஸ்.ஓ.பி., வழிகாட்டுதல் இருப்பதால் நாய்களை கட்டுப்படுத்துவதில் நிறைய விஷயங்களை செய்ய முடியவில்லை. பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்தில் நிறைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.த.வெ.க., தலைவர்நடிகர் விஜய் பிரச்னைகளை பற்றி பேசுவது வரவேற்கதக்கது. மாநில அரசு நான்கு இடங்களை தேர்வு செய்தது. அதில் மத்திய அரசு 2 இடங்களை தேர்வு செய்தது.அரசியல் செய்வதை விட தமிழக வளர்ச்சியை கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும். அவர் பா.ஜ.,வை எதிர்த்ததால் இண்டியா கூட்டணிக்கு அழைத்தோம். சீமான் ஈ.வே.ரா அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ