உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பெரிய மாரியம்மன் கோயில் முன் சகதி

பெரிய மாரியம்மன் கோயில் முன் சகதி

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயில் முன்புறம் உள்ள மைதானத்தில் மழையினால் சகதி ஏற்பட்டதால் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.இக்கோயில் முன்புறம் உள்ள காலி மைதானத்தில் பூக்குழி திருவிழாவின் போது பல ஆயிரம் பக்தர்கள் திரண்டு நின்று அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். பூக்குழி திருவிழா முடிந்த பின்பு கோயில் முன்புறமுள்ள காலி இடத்தில் தற்போது பெரிய மாரியம்மன் மறைக்கும் விதமாக வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக கோயில் முன்பு சகதி ஏற்பட்டு பக்தர்கள் நடந்து செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.எனவே, நடந்து செல்லும் பாதையில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கவும், பெரிய மாரியம்மனை மறைக்கும் விதமாக நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்தவும் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை