உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சத்திரப்பட்டி, ஸ்ரீவி.,யில் முளைப்பாரி திருவிழா

சத்திரப்பட்டி, ஸ்ரீவி.,யில் முளைப்பாரி திருவிழா

சத்திரப்பட்டி: ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி, சங்கர பாண்டியபுரம், அய்யனாபுரம் பகுதிகளில் முளைப்பாரி திருவிழா நடந்தது. வீடுகளில் விரதம் இருந்து வளர்த்த முளைப்பாரிகளை செல்வமுளை மாரியம்மன், யோக மாரியம்மன், ஜெய மாரியம்மன் உள்ளிட்ட கோயில் முன்பு வைத்து வழிபட்டனர். பின்னர் சத்திரப்பட்டி புது தெரு, வடக்கு தெரு, நடுத்தெரு கீழ்ப்பகுதி, நடுத் தெரு மேல் பகுதி, சமுசிகாபுரம் பகுதிகள் சார்பில் முளைப்பாரிகளை பெண்கள், எடுத்து தெரு வழியாக சுற்றி வந்தனர். மதியம் 2:00 மணிக்கு துரை மடம் அருகே கிணற்றில் முளைப்பாரிகளை கரைத்தனர். தங்கச் சப்பரம் ஊர்வலம் நடைபெற்றது. ஏற்பாடுகளை சத்திரப்பட்டி ஊர் தலைவர்கள், நிர்வாகிகள் செய்தனர். *ஸ்ரீவில்லிபுத்துாரில் மாரியம்மன் கோயில் மேற்கு, கிழக்கு மாயாண்டி பட்டி, கீழப்பட்டி, முதலியார் பட்டி உட்பட பல்வேறு தெருக்களில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கடந்த வாரம் துவங்கியது. முக்கிய திருவிழாவான முளைப்பாரி எடுத்தல் நேற்று மாலை 5:00 மணி முதல் துவங்கியது. ஒவ்வொரு தெருவில் இருந்தும் திரளான பெண்கள் முளைப்பாரி எடுத்து பெரிய மாரியம்மன் கோயிலில் ஒன்று கூடி அம்மனை வழிபட்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று பட்டத் தரசி அம்மனை வணங்கி, அப்பகுதியில் இருந்த நீர் நிலைகளில் முளைப்பாரிகளை கரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை