உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அலைபேசி டவர் அமைப்பதை கண்டித்து நகராட்சி முற்றுகை

அலைபேசி டவர் அமைப்பதை கண்டித்து நகராட்சி முற்றுகை

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் குடியிருப்பு பகுதியில் அலைபேசி டவர் அமைப்பதை கண்டித்து மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.அருப்புக்கோட்டை புளியம்பட்டி ராமானுஜ கூட தெருவில் வீடுகளுக்கு அருகில் அலைபேசி டவர் கட்டும் பணி நடந்து வருகிறது. பள்ளி, கோவில் அருகில் இருப்பதாலும் மக்களுக்கு இடையூறாகவும், உடல் ரீதியாகவும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் அப்பகுதி மக்கள் நேற்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நகராட்சி கமிஷனரிடம் கலந்து நடவடிக்கை எடுப்பதாக துணை தலைவர் பழனிச்சாமி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி