மேலும் செய்திகள்
தம்பியை கொல்ல முயன்ற அண்ணனுக்கு 7 ஆண்டு சிறை
07-Aug-2025
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அண்ணன் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான தம்பியை கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகாசி ரிசர்வ்லைன் நேருஜிநகரைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மூத்த மகன் ஈஸ்வரபாண்டியன் 26, 2023 செப்டம்பரில் முன் விரோதத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கோகுல்குமார் உள்ளிட்டோரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஈஸ்வரபாண்டியன் வெள்ளைச்சாமி, தாயார், தம்பி கணேஷ்பாண்டி 21, ஆகியோர் முக்கிய சாட்சிகளாக இருந்தனர். தாய், தந்தை இருவரும் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த நிலையில் கணேஷ்பாண்டி சாட்சியம் அளிக்க இருந்தார். இந்நிலையில் கணேஷ்பாண்டியை சாட்சி சொல்ல கூடாது என கோகுல்குமார் தொடர்ந்து மிரட்டி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோகுல்குமார், நண்பர்கள் சிலோன் காலனி எஸ்.கணேஷ்பாண்டி 24, காந்திநகர் ராஜேஷ் 21, பாறைப்பட்டி பிரவீன்குமார் 30, ஆகியோருடன் சேர்ந்து கணேஷ்பாண்டியை வெட்டி கொலை செய்தார். கணேஷ்பாண்டி உடலை போலீசார் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவயிடத்தை எஸ்.பி., கண்ணன் ஆய்வு செய்தார். கோகுல்குமார் உள்ளிட்ட நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். கோகுல்குமார், எஸ்.கணேஷ்பாண்டி, ராஜேஷ் ஆகியோர் ஈஸ்வரபாண்டியன் கொலை வழக்கிலும் தொடர்புடையவர்கள்.
07-Aug-2025