உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அகலமில்லாத கண்மாய்கரை ரோடுகள்

அகலமில்லாத கண்மாய்கரை ரோடுகள்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார்,வத்திராயிருப்பு தாலுகாவில் பல்வேறு கிராமப்புற வழித்தடங்களில் கண்மாய் கரை ரோடுகள் போதிய அகலம் இல்லாமலும், தடுப்பு சுவர் இல்லாமலும் உள்ளதால் வாகனங்கள் விபத்து அபாயத்துடன் பயணித்து வருகிறது. வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.ஸ்ரீவில்லிபுத்துார் நகர்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களான கோட்டைப்பட்டி, மம்சாபுரம், அத்திகுளம், மொட்டமலை, நூர்சாகிபுரம் உட்பட பல்வேறு கிராமங்களில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது.ஆனால், இங்கு செல்லும் வழியில் உள்ள கண்மாய் கரை ரோடுகள் போதிய அகலம் இல்லாமல், தடுப்பு சுவரும் இல்லாமல் உள்ளதால் இந்த வழியாக செல்லும் கார்,வேன், ஆட்டோ, பஸ் போன்ற கனரக வாகனங்கள் எதிரும் புதிருமாக எளிதில் செல்ல முடியாமல் விபத்து அபாயம் காணப்படுகிறது.ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டியில் இருந்து மம்சாபுரம் செல்லும் ரோட்டில் உள்ள பொன்னாங்கண்ணி கண்மாய்க்கரையும் போதிய அகலம் இல்லாமல் பள்ளி ,வேலை நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்திற்கு ஆளாகும் அபாயம் உள்ளது. கோட்டைப்பட்டியில் இருந்து மம்சாபுரத்திற்கு வரும் கண்மாய்க்கரை ரோடு சேதமடைந்த நிலையில் இதன் வழியாக மினி பஸ் இயங்கி வருகிறது.இதேபோல் அத்திகுளம் செல்லும் ரோட்டிலும் இலகு ரக வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அதிக அளவில் பயணித்து வருகிறது. இந்த ரோடும் போதிய அகலம் இல்லாமல் தடுப்பு சுவர் இல்லாமல் காணப்படுகிறது. கூட்டுறவு மில் எதிரில் உள்ள காதி போர்டு காலனி செல்லும் ரோடு தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் பகுதி போதிய அகலம் இல்லாமல் குறுகியதாக காணப்படுகிறது. இதனை ஒட்டி உள்ள ஓடையில் தடுப்பு சுவர் இல்லை. பாலத்தின் தடுப்பு சுவர் உயரம் குறைவாக உள்ளது.வன்னியம்பட்டியில் இருந்து மொட்டமலை வழியாக சத்திரப்பட்டி செல்லும் ரோட்டில் கண்மாய்க்கரை ரோடு வளைந்தும், உயர்ந்தும் காணப்படுவதால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.இதேபோல் வத்திராயிருப்பு தாலுகாவில் சுந்தரபாண்டியத்திலிருந்து கோட்டையூர் செல்லும் வழியில் உள்ள கண்மாய்க்கரை ரோடும், வத்திராயிருப்பில் இருந்து கூமாபட்டி செல்லும் ரோட்டில் விசாக சமுத்திரம் கண்மாய் ரோடும் போதிய அகலமும் இல்லாமல், தடுப்பு சுவர்களும் இல்லாமல் உள்ளது. இதன் வழியாக அதிகளவில் தற்போது பஸ் போக்குவரத்து நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !