தேசிய கைத்தறி தினவிழா கண்காட்சி
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் 11வது தேசிய கைத்தறி தின விழாவை முன்னிட்டு கைத்தறி துறையின் கண்காட்சி, விற்பனையை கலெக்டர் சுகபுத்ரா துவக்கி வைத்தார். இக்கண்காட்சியில் புவிசார் குறியீடு பெற்ற மதுரை சுங்குடி சேலைகள், காரைக்குடி கண்டாங்கி, சேலம் வெண்பட்டு வேட்டி, உட்பட கைத்தறி ரகங்களும்,, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் அனைத்து ரகங்களும் இடம் பெற்றது. சேமிப்பு, பாதுகாப்பு திட்டத்தில் 10 பேருக்கு ரூ. 9 லட்சத்தில் முதிர்வு தொகை, நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சுகபுத்ரா வழங்கினார். மேலும் நெசவாளர்கள் அதிகமாக வசிக்கும் சுந்தரபாண்டியபுரத்தில் 'வருமுன் காப்போம்' திட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கலை கல்லுாரியில் கைத்தறி ரகங்கள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கைத்தறித்துறை உதவி இயக்குனர் வெங்கடேசலு, அரசு விற்பனையாளர்கள், அலுவலர்கள் செய்தனர்.