மேலும் செய்திகள்
கல்லுாரியில் ரத்ததான விழிப்புணர்வு முகாம்
15-Mar-2025
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் அரசு கலை அறிவியல் கல்லூரி சார்பில் கீழ ராஜகுலாராமன் கிராமத்தில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் , ரத்த தான முகாம் நடந்தது.முதல்வர் சரவணன் தலைமை வகித்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாண்டியன் முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள், மாணவர்கள் ரத்த தானம் செய்தனர். விழாவில் திட்ட அலுவலர் சவுந்தரபாண்டி, பேராசிரியர்கள் இளையராஜா, ஜெகநாதன், கிருஷ்ணமூர்த்தி, மாணவர்கள் பங்கேற்றனர்.
15-Mar-2025